Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இதுவரை இல்லாத அளவு பெரியவியாபாரம்?அஜித் பட ஆச்சரியம்

 சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் வேதாளம் படத்தின் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தப்படத்தை நவம்பரில் வரவிருக்கும் தீபாவளிநாளில் வெளிக்கொண்டு வரத்திட்டமிட்டு வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

அதற்குள் படத்தின் வியாபாரம் பெரும்பகுதி முடிவடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. தமிழகத்திரையரங்கு உரிமையில் மட்டும் சுமார் நாற்பதுகோடிக்கு வியாபாரம் நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுவரையிலான அஜித் படவியாபாரங்களில் இதுவே அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தப்படத்தின் பெயர் அறிவிக்கப்படும் முன்பே இந்தவியாபாரம் முடிவடைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

தமிழகம் தவிர்த்து, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டைமாநிலங்கள் வெளிநாட்டுரிமை மற்றும் தொலைக்காட்சிஒளிபரப்புஉரிமை ஆகியன இந்தக்கணக்கில் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close