Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சூர்யாவின் சிங்கம் 3 படத்தைத் தயாரிப்பது யார்?

சூர்யா இப்போது விக்ரம்குமார் இயக்கத்தில் தயாராகும் 24 படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் இருக்கிறதாம். இந்தப்படத்தைத் தொடர்ந்து அவர் ஹரி இயக்கும் சிங்கம் 3 படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. 24 படத்தை முடித்துவிட்டு சூர்யா வந்ததும் படப்பிடிப்பைத் தொடங்கவேண்டும் என்று திட்டமிட்டு, இயக்குநர் ஹரியின் குழு தீவிரமாக இருக்கிறதாம்.

இந்தப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. அந்நிறுவனத்தோடு இன்னொரு புதியநிறுவனமும் இணைந்து தயாரிக்கப்போவதாகச் சொல்லப்பட்டது. அது எந்தநிறுவனம்?

வியாபாரத்துறையில் கொடிகட்டிப் பறக்கும் சரவணாஸ்டோர்ஸ், திரைப்படத்தயாரிப்பில் இறங்க முடிவு செய்திருப்பதாகவும் 2டி நிறுவனத்துடன் இணைந்து சிங்கம் 3 படத்தைத் தயாரிக்கப்போவதாகவும் சொல்லப்படுகிறது. இப்படி ஒரு பேச்சு இருந்தாலும் இந்தப்படத்தை ஸ்டுடியோகிரின் நிறுவனமும் 2டி நிறுவனமும் இணைந்து தயாரிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close