Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் மிகவும் அமைதியானவர்...விஜய் குறித்து ஸ்ருதி ஹாசன் பதில்

முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து நடித்தமைக் குறித்து ஸ்ருதி ஹாசன் பகிர்ந்துள்ளார். விஜய்யுடன் நடித்தது மிகவும் நல்ல அனுபவம். எல்லோருக்கும் தெரியும் விஜய் எவ்வளவு பெரிய நடிகர், எவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் அவருக்கு பின்னால் இருக்கிறார்கள் என.

எனினும் அதையெல்லாம் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக அவரது வேலையில் மட்டுமே ஈடுபாடு செலுத்துவார்.தன்னைத்தானே எப்போதும் நல்ல சிந்தனையுடன் வைத்துக்கொள்வார். அதே போல உண்மையில் அவர் நல்ல பாடகரும் கூட. மேலும் புலி கண்டிப்பாக குடும்பமாகப் பார்க்கக்கூடிய படம். பார்க்கும் ஒவ்வொருவருக்கும் வித்யாசமான அனுபவமும், கண்கவர் ஃபேண்டஸி விருந்தும் காத்திருக்கிறது.

மேலும் ஸ்ரீதேவியுடன் நடித்தமைக் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்ட போது, ஸ்ரீதேவி மிகவும் நல்ல நடிகை. அவருடன் நான் நடித்தது நல்ல அனுபவம். அவரைப் பார்த்து தான் எப்படி பல மொழிகள் சார்ந்த, பலதரப்பட்ட ரசிகர்களை கவர்வது என என்னை நானே மாற்றிக்கொள்வேன். நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள அவரிடம் இருக்கின்றன என கூறிய ஸ்ருதி புலி படத்தில் பார்வையாளர்களை கட்டிப்போடும் யுக்திகள் நிறைய இருக்கின்றன எனவும், மேலும் சிம்புதேவனுக்கு நல்ல கற்பனை திறம் எனவும் பாராட்டினார். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close