Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாறுவேடத்தில் கோயிலுக்குப் போன விஜய்

  சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் புலி, அக்டோபர் ஒன்றாம்தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப்படத்தின் வேலைகளை முன்பே முடித்துக்கொடுத்துவிட்ட விஜய், அட்லி இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். இதற்கிடையே புலி படம் இன்னும் சில தினங்களில் வெளியாகவிருக்கிறது என்பதால், விஜய் கோவில்களுக்குச் சென்று வழிபாடு நடத்திக்கொண்டிருக்கிறாராம்.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள ஆண்டாள்கோயிலுக்கு மாறுவேடத்தில் சென்று சாமி கும்பிட்டிருக்கிறார். முகத்தைத் துணியால் மறைத்துக்கொண்டதோடு தலையில் பெரியதொப்பியும் அணிந்திருந்தாராம். அதனால் அவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லையாம். வழிபாட்டின்போது அவரை சிலர் அடையாளம் கண்டுகொண்டனர் என்றும், அவர்களிடம், யாரிடமும் சொல்லாதீர்கள் என்று விஜய் கேட்டுக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

அவருடைய ஒவ்வொரு படமும் வெளியாகறி நேரத்தில் வேளாங்கண்ணிகோயிலுக்குச் சென்று வருவார் என்று சொல்லப்படும். இப்போது ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலுக்குச் சென்றிருக்கிறார். அப்படியே வேளாங்கண்ணிக்கும் சென்றுவருவார் என்றும் சொல்லப்படுகிறது.    

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்