Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சின்னப்புள்ளத்தனமா இருக்கு- சரத்குமாரைச் சாடும் பிரகாஷ்ராஜ்.

   நடிகர்சங்கத்தேர்தல் அக்டோபர் 18 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் சரத்குமார் மற்றும் விஷால் அணிகள் களத்தில் நிற்கின்றன. இரண்டுதரப்பினரும் தமிழகம் முழுவதும் உள்ள நாடகநடிகர்களைச் சந்தித்து ஓட்டுக்கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இரண்டு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்லிக்கொண்டும் இருக்கின்றனர். அண்மையில் சரத்குமார், நடிகர்சங்கத்தேர்தலுக்குப் பிறகு நடிகர்களுக்குள் ஒற்றுமை இருக்காது என்று சொல்லியிருந்தார். அதற்கு எதிர்க்கருத்தை பிரகாஷ்ராஜ் சொல்லியிருக்கிறார்.

அவர் சேலத்தில் பேசும்போது, விஸ்வரூபம் படத்துக்குச் சிக்கல் வந்த நேரத்தில் நான் வந்து நின்றேன் என்று சரத்குமார் பேசுகிறார், நடிகர்சங்க உறுப்பினருக்கு ஒரு சிக்கல் என்றால் வந்து நிற்பதற்காகத்தான் உங்களுக்கு ஓட்டுப்போட்டோம், உங்கள் பேச்சு சின்னப்புள்ளத்தனமா இருக்கு, நான் உனக்கு சாக்லேட் கொடுத்தேன் இப்ப அதைத்திருப்பிக்கொடு என்கிற மாதிரி இருக்கு.

சரத்குமார் எனக்கு நண்பர்தான், ஆனால் அவர் தப்பான இடத்தில் நிற்கிறார் எனவே எதிர்க்கின்ற சூழல் இருக்கிறது. பொறுப்பில் இருப்பவர்கள் பொறுப்பாகப் பேசவேண்டும் என்பது உட்பட சரத்குமார் அணியைத் தாக்கிப் பலவேறு கருத்துகளைச் சொல்லியிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.    

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்