Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஸ்ருதியிடம் சம்மதம் கேட்ட கமல்

 தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளிலும் முன்னணி நாயகியாக இருக்கிறார் கமல் மகள் ஸ்ருதிஹாசன். விஜய் ஜோடியாக இவர்  நடித்திருக்கும் ‘புலி’ படம் அக்டோபர் 1–ந்தேதி வெளியாகிறது. அஜித் ஜோடியாக நடிக்கும் ‘வேதாளம்’ படம் தீபாவளிக்கு வருகிறது. இவை மட்டுமின்றி  இரண்டு இந்திப் படங்களிலும்  நடித்துக்கொண்டிருக்கிறார்.

 

 

‘‘உலகிலேயே சிறந்த மனிதர் என் அப்பாதான். குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். குழந்தைகளை சுயமாகச் செயல்படவிட்டு அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் பெற்றோர் கவனிக்க வேண்டும். அவர்களைத் தடுத்தால் எதிர்காலத்தில் சொந்தக் காலில் நிற்க முடியாமல் போய்விடும்.

 

என் அப்பா எங்களை சிறு வயதில் சுதந்திரமாகச் செயல்பட விட்டார். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவரது சிந்தனையாக இருந்தது. அப்படி அவர் வளர்த்ததால்தான் எது சரி, எது தப்பு? என்று என்னால் இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. என் அப்பா மீது எனக்கு அபாரமான அன்பு இருக்கிறது.

 

என் சிறு வயதில் ஒரு நாள் அவர் என்னிடம் வந்து பெரிய படம் ஒன்று எடுக்கிறேன். அதற்கு நிறைய பணம் வேண்டும். இதனால் நாம் குடியிருக்கும் பெரிய வீட்டில் இருந்து சிறிய வீட்டுக்குப் போக வேண்டியது இருக்கும். சம்மதம்தானா? என்று கேட்டார். நான் அவரிடம் நீங்கள் என்னோடு இருந்தால் போதும் அப்பா என்று கூறினேன்.

என்  தந்தை நேர்மையானவர். சிறு வயதில் என் அப்பாமீது அன்பு மட்டும்தான் இருந்தது. இப்போது அவர்மீது மரியாதையும் வருகிறது’’ என்று கூறியிருக்கிறார் ஸ்ருதி.

 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close