Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புலி படத்துக்கு தடை? நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தஞ்சையை சேர்ந்த அன்பு ராஜசேகர் என்பவர்  தான் இயக்கிய 'தாகபூமி' என்ற குறும்படத்தின் கதையை தழுவி 'கத்தி' படம் உருவாக்கப்பட்டதாகவும், இதற்காக முருகதாஸ், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி. வில்லியம்ஸ், நடிகர் விஜய் ஆகியோர் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனவும் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் 2014, டிச. 22-ம் தேதி வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது

இதேபோல, விஜய் நடிக்கும் புலி படத்தையும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் அகிரா படத்திற்கும் தடை விதிக்ககோரி மற்றொரு வழக்கைத் தொடுத்துள்ளார் அன்பு ராஜசேகர்.

நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கை வரும் அக்டோபர் 7ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். மேலும் 'புலி' படத்தை அக்டோபர் 1ஆம் தேதி தடை செய்வது குறித்து அவர் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கவில்லை. மேலும் இந்த வழக்கில் பதிலளிக்குமாறு முருகதாசுக்கும், விஜய்க்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close