Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புலி நாளை ரிலீஸ்... விஜய் உட்பட புலி படக்குழுவினர் வீடுகளில் இன்று ஐடி ரெய்டு!

நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகர் விஜய்யின் வீடு, அவரது அலுவலகம், நடிகைகள் நயன்தாரா, சமந்தா, இயக்குனர் சிம்புதேவன் அலுவலகம்,தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, மதுரை அன்பு,. செல்வகுமார் மற்றும் புலி படத்தின் குழுவினர் இல்லங்கள், அலுவலகங்கள் என மொத்தமாக 25 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், மதுரை, கொச்சி, ஹைதராபாத்தில் உள்ள இவர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை விஜய் நடித்து வெளியாகவுள்ள "புலி" படமானது பெருமளவு பொருட் செலவில் படமாக்கப்பட்டுள்ளது.கணக்கில் காட்டப்படாத பணத்திலேயே இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக வந்த செய்தியை அடுத்தே இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close