Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காந்தி ஜெயந்திக்கு திரையரங்குகளில் இலவசக் காட்சிகள்!

அக்டோபர் 2, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் உள்ள பிரபல திரையரங்கங்கள் சில ரிச்சர்ட் அட்டென்பாரோ இயக்கிய காந்தி படத்தை தமிழில் திரையிடுகின்றன.

காந்தி சர்வ சமய பிரார்த்தனை மையமும், தேசிய திரைப்பட வளர்ச்சி சங்கமும் இணைந்து நடத்துகின்ற இந்தத் திரையிடல்.அன்னை அபிராமி, எஸ் 2 சினிமாஸ் பெரம்பூர், சாய் சாந்தி , ஸ்டூடியோ 5 போன்ற திரையரங்குகளில் திரையிடப்படவிருக்கிறது. வழக்கமாக இது போன்ற படங்களைக் காண பணம் கொடுத்து டிக்கெட்கள் வாங்க வேண்டியதாக இருக்கும் .

இது சமூக நலனுக்காக திரையிடப்படுவதால் இலவசமாக மக்களை அனுமதிக்க முன் வந்திருக்கின்றனர் திரையரங்குகள். ஆனால் முதலில் வருவோருக்கே முன் உரிமை என்ற அடிப்படையிலேயே இருக்கைகள் அளிக்கப்படும். படத்திற்கு முன்னதாக “மீண்டும் காந்தி” எனப்படும் ஆவணப்படமும் திரையிடப்படவிருக்கிறது. 

- ஐ.மா.கிருத்திகா -

எடிட்டர் சாய்ஸ்

[X] Close