Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹன்சிகாவின் கோரிக்கையை நிறைவேற்றுவாரா ரஜினிகாந்த்?

 தமிழ் சினிமாவைப் பொருத்தமட்டில் ஒரு ஹீரோயினின் ஆசை என்றால் ரஜினி , கமல், விஜய் , அஜித் என இவர்கள் நால்வருடனும் நடிக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். அந்த வகையில் இன்னும் சில முன்னணி நாயகிகளுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்த பாடில்லை என்றே சொல்ல வேண்டும். 

இந்நிலையில் ஹன்சிகா சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வேண்டும் என்ற தனது கனவை வெளிப்படுத்தியுள்ளார். சூப்பர் ஸ்டாரின் ரசிகையான தனக்கு அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை எனவும் மேலும் ரஜினிகாந்த் படமெனில் குணச்சித்திர வேடத்தில் நடித்தால் கூட பராவாயில்லை எனவும் தனது ஆசையாகக் கூறியுள்ளார்.இந்தக் கோரிக்கையை ரஜினிகாந்த நிறைவேற்றுவாரா. 

இதே போல் நயன்தாரா முன்னணி நடிகையாக தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த நிலையிலும் அவருக்குக் கமல் படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இன்னமும் அமையவில்லை. அதே போல் த்ரிஷாவுக்கு இரண்டு படங்களில் கமலுடன் நடிக்க வாய்ப்புக் கிடைத்துவிட்டது என்றாலும் நடிக்க வந்து 15 வருடங்கள் நிறைவைடையவிருக்கும் நிலையிலும் இன்னமும் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைக்க வில்லை. 

ஹன்சிகாவுக்கு ரஜினி, கமல், அஜித், காஜல் அகர்வாலுக்கு அஜித், கமல், ரஜினி, தமன்னாவுக்கு ரஜினி, கமல், அனுஷ்காவுக்கு , கமல், சமந்தாவுக்கு ரஜினி, கமல், அஜித் என இப்படிச் சொல்லிகொண்டே போகலாம். 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close