Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் கொடுத்த 5 கோடி! சிக்கலைத் தீர்க்க கடைசி நிமிட பேச்சுவார்த்தை! உண்மைக் காரணம்?

நடிகர் விஜய் நடித்த புலி படம் சுமார் ரூ100 கோடி பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. சிம்புதேவன் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, சுதீப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகவிருந்தது. இன்று காலை 4மணிக்கு, 7 மணிக்கும் திரையிடப்பட வேண்டிய சிறப்புக் காட்சிகள் ரத்துசெய்யப்பட்டன. மேலும் நேற்றிரவே பல மல்டி திரையரங்குகளில் புக்கிங் செய்யப்பட்டிருந்த டிக்கெட்டுகள் ரத்துசெய்யப்பட்டு பணம் திரும்ப தரப்பட்டுவந்தன.

படம் வெளியாகாமல் போனதற்கு கடைசிநேர பணம் செட்டில்மெண்ட் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது. 10 கோடிரூபாய் பாக்கி தொகையை செட்டில் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதாம்.

நேற்றிரவு முழுவதும் இதற்கான பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அந்தப் பேச்சுவார்த்தையில் நடிகர் விஜய், புலி படத் தயாரிப்பாளர்கள், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், மன்னர் பிலிம்ஸ் மன்னர், டி.ராஜேந்தர், தயாரிப்பாளர் கதிரேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

படம் வெளியாவதற்காக விஜய் மட்டும் 5 கோடிரூபாய் தந்ததாக சொல்லப்படுகிறது. இன்று காலைவரை நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்திருக்கிறதாம்.

இந்நிலையில் திரையரங்குகளில் படத்தை ரிலீஸ் செய்வதில் இருந்த சிக்கல்கள் நீங்கியதாகவும், படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்றும் 'புலி' தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்தது.

இன்று அதிகாலைத் தொடங்கி சிறப்புக் காட்சிகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டதே தவிர, வழக்கமான காலைக் காட்சிகள் தொடங்கி படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்றும் அவர்கள் நம்பிக்கைத் தெரிவித்தனர்.

அதுமட்டுமில்லாமல் ட்விட்டரில் ISupportPuli என்று ட்ரெண்ட் உருவாக்கிவருகின்றனர் விஜய்ரசிகர்கள். விஜய் ரசிகர்களின் படத்துக்கான கொண்டாட்டம் மட்டுமில்லாமல் திரையரங்கு முன்பு மறியலிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

இதற்கு மத்தியில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விஜய்க்கு ஆதரவாக “ வெயிட்டிங் புலி” என்று ட்விட் செய்துள்ளார். மேலும் இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்ட்டாகி வருவது கவனிக்கத்தக்கது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close