Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கத்தி படத்தை இந்தியில் தயாரிக்கிறார் முருகதாஸ்?

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படம் இந்தியில் எடுக்கப்படவிருக்கிறதாம். எற்கெனவே இதுதொடர்பாகப் பல செய்திகள் வந்திருந்தாலும் அவை எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கத்தி படத்தை இந்தியில் மொழிமாற்றம் செய்யவிருப்பதாகவும் அதில் அக்ஷய்குமார் நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்தப்படத்தை முருகதாஸிடம் இணைஇயக்குநராக இருந்த ஜெகன் இயக்கவிருக்கிறாராம்.

பெங்களூரைச் சேர்ந்த இவர் முருகதாஸின் இந்திப்படங்களில் பணியாற்றியவர் என்று சொல்லப்படுகிறது. இந்தப்படத்தை முருகதாஸே தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கத்தி படத்தைத் தயாரித்த லைகா நிறுவனத்துடன் இணைந்து இந்தப்படத்தைத் தயாரிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. விரைவில் இது பற்றிய அறிவிப்பு வரும் என்றும் சொல்கிறார்கள்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close