Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஜித்துடன் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்த லட்சுமிமேனன்

சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், நடிப்பில் உருவாகிவரும் படம் வேதாளம். இப்படம் தீபாவளி சிறப்பாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித்துடன் நடிப்பது குறித்தும் , அவரது நல்ல குணம் குறித்தும் ஸ்ருதி ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

தற்போது அஜித்துக்கு தங்கச்சியாக வேதாளம் படத்தில் நடித்துள்ள லட்சுமி மேனன் படத்தில் நடித்தமை குறித்தும் அஜித் குறித்தும் பகிர்ந்துள்ளார். ”வேதாளம் படப்பிடிப்பு நிறைவடைந்தது. 8ம் தேதி படத்தின் டீஸர் வெளியாகிறது. என்னால் காத்திருக்க முடியவில்லை. டீஸரை மிகவும் நேர்த்தியாக உருவாக்கியுள்ளனர், படப்பிடிப்பின் போது கொடுத்த அன்புக்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி”.

”ஜென்டில்மேன் அஜித்துடன் எனது நடிப்பை பகிர்ந்துகொண்டது மிகவும் சிறப்பான ஒன்று. அவர் எவ்வளவு பெரிய மாஸ் ஹீரோ எனினும் எளிமையான, பணிவான மனிதராக இருக்கிறார்” என அஜித் குறித்து வியந்து கூறியுள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close