Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இசைவெளியீட்டு விழாவில் கண்ணீர்விட்டு அழுத பிரஜன்!

ஸ்ரீ கிருஷ்ணா டாக்கீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் வி.எம்.பிரகாஷ் தயாரிக்கும் படம் “ பழைய வண்ணாரப்பேட்டை “ மோகன்.ஜி இயக்கியுள்ளார்.

 இந்த படத்தில் பிரஜன், ரிச்சர்ட், நிஷாந்த் ஆகியோர் நாயகர்களாக நடிக்கிறார்கள்.

அஸ்மிதா கதாநாயகியாக நடிக்கிறார். கருணாஸ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மற்றும் ரோபோசங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவுக்கு இயக்குநர்கள் சங்கத்தலைவர் விக்ரமன், தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த டி.சிவா, கதிரேசன் உட்பட பலரை அழைத்திருந்தார்களாம். ஆனால் அவர்கள் யாரும் விழாவில் கலந்துகொள்ளவில்லை. இதனால்   படத்தின் நாயகன் பிரஜன் கண்ணீர்விட்டு அழுதார். 

அவர்  பேசும்போது, 

இந்தப் படம் வெற்றிப்படமாக ஆகவேண்டும் என்று நான் தினமும் சாமியை கும்பிடுகிறேன். இசை வெளியீட்டு விழா நடத்த சிறப்பு விருந்தினர்களாக வர இருந்த அனைவரிடமும் கேட்டு அவர்கள் சரி என்று சொன்ன பிறகுதான் அவர்கள் பெயர்கள் அழைப்பிதழில் போட்டு அவர்களுக்கு விழாவிற்கு வருகை தந்து வாழ்த்துமாறு கேட்டுக் கொண்டோம். ஆனால் விழாவிற்கு யாரும் வரவில்லை.

நான் நிறைய படங்கள் நடித்திருக்கிறேன் ஆனால் இந்தப் படம் என் சினிமா வாழ்கையில் முக்கியமான படம். படத்தின் பாடல்களும் படமும் சிறப்பாக இருக்கும். பாடல்கள்  மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. உங்கள் பாராட்டு எங்களுக்கு வேண்டும் என்றுதான் அழைக்கிறோம் ஆனால் யாருமே வராதது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது என்று கண்ணீர் விட்டு அழுதார்

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close