Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமன்னா அழகின் ரகசியத்தை தெரிஞ்சுக்கணுமா? அவரே சொல்கிறார்!

சினிமாவுக்கு வந்து வருடங்கள் பல ஓடினாலும் இன்னும் அதே ஒல்லி தேகத்துடன் வசீகரித்துவரும் நடிகை தமன்னா. வீரம், பாகுபலி, விஎஸ்ஓபி உள்ளிட்ட படங்களில் தன்னுடைய அழகால் ரசிகர்களைக் கவர்ந்த தமன்னா, தன் அழகின் ரகசியத்தைப் பகிர்ந்து கொண்டார்.

“என் நிறம் அம்மா, அப்பா மரபணுக்களில் இருந்து வந்தது. அவர்கள் இருவரும் நல்ல நிறமாக இருப்பார்கள். நான் கொஞ்சம் கூடுதல் நிறமாக இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே கிரீம் பயன்படுத்துவது இல்லை. மஞ்சள் பொடி, வேப்பிலைப் பொடியை ரோஸ் தண்ணீரில் கலந்து வைத்துக்கொள்வேன். அதை முகத்தில் தேய்த்து குளிப்பேன், இது அம்மா எனக்கு சொல்லிக்கொடுத்தது.

ஷாம்புவை எப்போதும் பயன்படுத்தியது இல்லை. மூலிகை பவுடர்களைத்தான் தலையில் தேய்த்து குளிக்கிறேன். பப்பாளி, வெள்ளரிக்காய், சீயக்காயை கலந்து தலையில் தேய்த்து குளிப்பேன். வெளிப்புற படப்பிடிப்புகளில் வெயில் பட்டு முகத்தில் அழகு மங்கும். அதைத் தவிர்க்க கிராமத்தில் பிரபலமான நலுங்கு மாவை தயார் செய்து உடம்பில் தேய்ப்பேன்.

படப்பிடிப்புகள் இல்லாதபோது ‘மேக்கப்’ போட மாட்டேன். பாதாம் பருப்பை இரவில் ஊற வைத்து காலையில் சாப்பிடுவேன். வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பேன். தயிர் ரொம்பப் பிடிக்கும். உடம்புக்கு அது குளிர்ச்சியைக் கொடுக்கும். கால்சியமும் அதிகம் இருக்கிறது.

தினமும் சூப், பழரசங்கள் குடிப்பேன். உலர்ந்த உணவுப்பண்டங்கள், எண்ணெயில் தயார் செய்த உணவுகள், டின்களில் அடைத்து விற்கப்படும் உணவுகளைத் தொடுவது இல்லை. தினமும் உடற்பயிற்சிகளும் செய்கிறேன். ஒரு மணி நேரத்துக்கும் மேல் உடற்பயிற்சிக் கூடத்தில் செலவிடுவேன். இவையெல்லாம் என் அழகின் ரகசியங்கள்’’ என்கிறார் தமன்னா.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close