Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தவாரம் ஏழுபடங்கள் வெளியாகின்றன

  ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுப்படங்கள் வெளியாகும். வரும் வெள்ளி அக்டோபர் 16 ஆம் தேதியன்று ஏழு படங்கள் வெளியாகவிருக்கின்றன. பாகுபலி அளவுக்கு எதிர்பார்ப்புள்ள படம் அனுஷ்கா நடித்த ருத்ரமாதேவி. குணசேகர் இயக்கிய இந்தப்படம் தெலுங்கில் கடநத்வாரமே வெளியாகிவிட்டது.

பெரியநடிகர்களின் படங்களுக்கு இணையாக திரையரங்குகளைப் பெற்றிருக்கிறதாம். தயாராகிப் பல மாதங்கள் ஆகிவிட்ட படம் சிவப்பு. தமிழகத்துக்கு அகதிகளாக வந்த ஈழத்தமிழர்களின் வலியைச் சொல்லும் அந்தப்படத்தை கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கியிருக்கிறார்.

இந்தப்படத்தில் ஈழத்தமிழ்ப்பெண்ணாக ரூபாமஞ்சரி நடித்திருக்கிறார். ராஜ்கிரண் முக்கியவேடத்தில் நடித்திருக்கிறார். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ள படம் மய்யம், மன்சூரலிகானின் அதிரடி, மகேந்திரன் நாயகனாக நடித்திருக்கும் விரைவில்இசை, இவ்வாண்டுத் தொடக்கத்திலேயே வெளியாகும் என்று சொல்லப்பட்ட திரைப்படநகரம் மற்றும் புதுமுகங்கள் நடித்திருக்கிற திகில்படம் மரப்பாச்சி ஆகிய ஏழுபடங்கள் வெளியாகவிருக்கின்றன.

கடந்தவாரம் இரண்டேபடங்கள் வெளியாகின இந்தவாரம் ஏழு படங்கள். இப்படம் வெளியாகி ஐந்துநாட்களில் பல படங்கள் வெளியாகவிருக்கின்றன. 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close