Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய்சேதுபதி படத்தின் ஒரிஜினல் இதுதான்?

 சூதுகவ்வும் படத்துக்குப் பிறகு நலன்குமாரசாமி இயக்கும் படம் காதலும்கடந்துபோகும். இந்தப்படத்திலும் விஜய்சேதுபதிதான் கதாநாயகன். கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்தப்படம் இப்போது நிறைவடையும் நிலையில் இருக்கிறதாம்.

ஒருபடம் உருவாகும்போதே இது அந்தமொழிப்படத்தைத் தழுவியது, இந்த மொழிப்படத்தின் காப்பி என்றெல்லாம் செய்திகள் வரும். இந்த காதலும் கடந்துபோகும் படம் ஒரு கொரியப்படத்தைத் தழுவி எடுக்கப்படுகிறதாம். ஆனால் அதற்கான உரிமையை முறைப்படி வாங்கி தமிழுக்கேற்ப மாற்றங்களைச் செய்து எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

2010 ஆம் ஆண்டு வெளியான மைடியர் டெஸ்பரடோ என்கிற படத்தைத் தழுவித்தான் இந்தப்படத்தை எடுத்துக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். காதலும் நகைச்சுவையும் கலந்த அந்தப்படத்தின் கதை இங்கும் ரசிக்கப்படும் என்றும் தமிழுக்கேற்ப செய்யப்பட்ட மாற்றங்கள் படத்துக்கு இன்னும் பலமாக அமையும் என்றும் சொல்கிறார்கள்.    

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close