Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எதிர்பாராத சங்கடத்தில் கௌதம்மேனன், அனுஷ்கா

  குணசேகர் இயக்கத்தில் அனுஷ்கா, ராணா, நித்யாமேனன் உட்பட பலர் நடித்த படம் ருத்ரமாதேவி. பாகுபலியின் பெரியவெற்றி மற்றும் எற்கெனவே அனுஷ்கா நடித்த அருந்ததி படத்தின் பெரியவெற்றி ஆகியனவற்றால் இந்தப்படத்துக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்தஎதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் படத்தின் வெளியீடு பலமுறை தள்ளிவைக்கப்பட்டது.

தெலுங்கு, தமிழ் ஆகிய இரண்டுமொழிகளில் உருவாகியிருந்தாலும், இரண்டுமொழிகளிலும் ஒரேநேரத்தில் வெளியிடாமல், தெலுங்கில் கடந்தவாரமே வெளியிட்டுவிட்டார்கள். அங்கு அந்தப்படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. படம் வெற்றி என்று சிலரும் தோல்வி என்று சிலரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

இதனால் இங்கு அந்தப்படத்துக்குப் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பாக இயக்குநர்கௌதம் தயாரிப்பில் உருவான கொரியர் பாய்கல்யாண் படம் வெளியாகிப் பெரிதாகப் போகவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் தமிழில் தமிழ்ச்செல்வனும்தனியார்அஞ்சலும் என்ற பெயரில் எடுக்கப்பட்ட அந்தப்படம் வெளியிடுவது சிக்கலாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது ருத்ராமாதேவியும் இப்படியாகியிருப்பதால் படக்குழுவினர் சங்கடத்தில் இருக்கிறார்களாம். ஆனாலும், அங்கே தோல்வியடையும் படங்கள் இங்கே பெரியவெற்றியை அடைவதும் இங்கே தோல்வியடையும் அங்கே வெற்றியடையும் நிகழ்வுகளும் நடந்திருப்பதால் தெம்பாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்.    

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்