Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆச்சரியங்களை அடுக்கிக்கொண்டே போகும் ஷங்கர்- எந்திரன் 2 தகவல்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, நடிக்க இருக்கும் படம் எந்திரன்2. இப்படத்தின் பட்ஜெட் 250 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கபாலி படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் ரஜினி அப்படத்தின் நிறைவுக்குப் பிறகு எந்திரன் 2 படத்தில் இணைய உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடத் துவக்கத்தில் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. மேலும் கதாநாயகியாக பாலிவுட்டின் நடிகைகள் சிலரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். வில்லனாக நடிக்க அர்னால்டு உள்ளிட்ட பல ஹாலிவுட் நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதுதவிர்த்து படத்தில் இசை ஏ.ஆர்.ரஹ்மான், கலை இயக்குநராக டி.முத்துராஜ், கிராஃபிக்ஸ் காட்சிகள் ஸ்ரீனிவாஸ் மோகன், எடிட்டிங் ஆண்டனி என இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய தகவலாக படத்தின் பெரும்பாலான பகுதி 3டி மோஷன் கேப்சரில் எடுக்க உள்ளதாக படத்திற்கு நெருங்கிய வட்டாரங்களில் கூறப்படுகிறது. மேலும் மோஷன் கேப்சர் முதல் பாகமான எந்திரனில் இரண்டாம் பாதி சண்டைக் காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

எந்திரன் 2ம் பாகத்தில் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட உள்ளன, மேலும் 3ம் பாகத்தில் படம் முழுமையும் தி அட்வென்சர் ஆஃப் டின் டின், மற்றும் கோச்சடையான் பாணியில் மோஷன் கேப்சரிலேயே எடுக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. எந்திரன்2 படத்தை லைகா இண்டர்நேஷனல் தயாரிக்க இருக்கிறார்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close