Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஜித் படத்தில் நடந்திருக்கும் ஆச்சரியம்

திரையுலகம் சென்டிமெண்ட்களில் நிரம்பிவழியும். ஒரு படப்பிடிப்பு தொடங்கும்போது சாமிபடம் ஒன்று உடைந்துவிழுந்தது அந்தப்படம் வெற்றி என்பதால் ஒவ்வொரு படம் தொடங்கும்போதும் சாமி படத்தை தாமாகவே முன்வந்து உடைப்பவர்கள்நிறைந்த உலகம்.

சின்னநடிகர் பெரியநடிகர் என்கிற பாகுபாடில்லாமல் எல்லா நடிகர்களின் படங்களிலும் இது நடக்கும். சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்துக்கும் அப்படி ஒரு நம்பிக்கை உண்டு. அந்தப்படத்தின் எல்லா முக்கிய நிகழ்ச்சிகளும் வியாழக்கிழமையில்தான் நடக்கும்.

படப்பிடிப்பு தொடங்கிய மே ஏழாம்நாள் வியாழக்கிழமை, படத்தின் பெயரை அறிவித்த செப்டம்பர் 24 ஆம் தேதியும் வியாழக்கிழமை. படத்தின் சிறுமுன்னோட்டம் வெளியான அக்டோபர் எட்டாம்தேதியும் வியாழக்கிழமைதான்.

இப்படி எல்லாமே வியாழக்கிழமைகளில் செய்தவர்கள் முதன்முறையாக அந்த சென்டிமெண்ட்டை விட்டுவிட்டு படத்தின் பாடல்களை அக்டோபர் 16 வெள்ளிக்கிழமையன்று வெளியிடவிருக்கிறார்கள். படத்தின் இசைமைப்பாளர் அனிருத் பிறந்தநாள் என்பதால் அந்தநாளில் பாடல்களை வெளியிடுகிறார்கள்.

இதன்மூலம் அவர்களே உருவாக்கிய வியாழக்கிழமை சென்டிமெண்ட்டை அவர்களே உடைத்திருக்கிறார்கள். திரையுலகில் பலரும் இதை வியப்புடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close