Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பேயாக நடிக்கும் காக்காமுட்டை நாயகி

தேசிய விருது பெற்ற “காக்கா முட்டை” படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்த ஐஸ்வர்யாராஜேஷ், குஷ்புவின் “அவ்னி சினிமேக்ஸ்” நிறுவனம் தயாரிக்கும் “ஹலோ… நான் பேய் பேசுறேன்” படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ள நிலையில், அடுத்து உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், என்றென்றும் புன்னகை அகமது இயக்கும் புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இதனுடன், “ஈரம்” அறிவழகன் இயக்கத்தில் அருள்நிதியின் ஜோடியாக "ஆறாது சினம்" படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இரண்டு புதிய படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக உற்சாகமுடன் கூறும் ஐஸ்வர்யா ராஜேஷ், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் எனக் கூறியுள்ளார்.

.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
[X] Close