Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிறந்த நாளன்று கண்ணீர்விட்டழுத சினேகா! கலங்கிய ஊழியர்கள்!

சினேகா தனது பிறந்தநாளை, திறன்குன்றியோர் இல்லத்தில் நேற்று கேக் வெட்டிக் கொண்டாடினார்.  ஒவ்வொரு பிறந்த நாளையும் ஆடம்பரமாகக்  கொண்டாடாமல் அனாதைக் குழந்தைகள் இல்லத்திலோ, அல்லது மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் இல்லத்திலோ அவர்களுக்கு உணவு வழங்கிக் கொண்டாடி வருகிறவர் சினேகா. இது வருடம் தவறாமல் நடந்து வருகிறது.

சமீபத்தில் பிரசன்னா - சினேகா தம்பதிக்கு விஹான் என்ற ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு எந்த நிகழ்ச்சியிலும் தலைகாட்டாமல் இருந்துவந்த சினேகா நேற்று கொளத்தூரில் உள்ள ஸ்ரீ அருணோதயம் சாரிட்டபிள் டிரஸ்டில் உள்ள மனநலம் குற்றிய குழந்தைகள் நடுவே பிரசன்னாவுடன் வந்து கொண்டாடினார்.

அவர்களுக்கு கேக் ஊட்டியும் உணவு பரிமாறியும் மகிழ்ந்தார். கடைசியாக ட்யூப் மூலமாக உணவு பெற்றுக்கொள்ளும் நிலையில் உள்ள குழந்தைகள் நிரம்பிய அறைக்குச் சென்ற சினேகா அவர்களின் நிலையைப் பார்த்ததும் தாங்க முடியாமல் கலங்கி அழ ஆரம்பித்துவிட்டார்.

மகிழ்வாகக் கொண்டாட வந்தவர் அழத்தொடங்கியதும் அங்கு பணிபுரிந்த  ஊழியர்களும் கலங்கிவிட்டனர். பின் பிரசன்னா  அவரைத் தேற்றி  அழைத்துச் சென்றார்.

கண்கலங்கிய சினேகா பிறந்த நாள் கொண்டாட்ட ஆல்பத்திற்கு: http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4837

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close