Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கான் பட விவகாரம், சிம்புவுக்கு மீண்டும் சோதனை!

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் கான் படம் திடீரென கைவிடப்பட்டுள்ளது. படம் ஆரம்பித்தும் படத்திற்கு போதிய நிதியுதவி கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. இது குறித்து செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

நிறைய வதந்திகள் கான் படம் குறித்து உலாவிவருகின்றன. நான் அதற்கு தகுந்த பதிலளிக்க விரும்புகிறேன். கான் படம் என் மனதுக்கு நெருக்கமான கதையம்சம் கொண்ட படம். லட்சியம் சார்ந்த படம் மற்றும் படக்குழுவும் அமைந்தது. படக்குழுவும், நானும் இணைந்து ஒருமனதாக படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகளை அடுத்த வருடம் மீண்டும் துவக்கலாம் என இருக்கிறோம். சிம்பு மற்றும் படக்குழுவுடன் இணைந்து பணியாற்றிய  நிமிடங்களைக் கண்டிப்பாக நான் மிஸ் பண்ணுவேன் எனக் கூறியுள்ளார்.

ஒரு படம் ஆரம்பித்தவுடனேயே படத்திற்கான நிதியுதவி கிடைத்து படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற ஆரம்பித்துவிடும். ஆனால் கான் படத்தின் படப்பிடிப்புகள் துவங்கி சென்றுகொண்டிருக்கும் வேளையிலும் யாரும் தயாரிப்புச் செலவுக்கு பைனான்ஸ் அளிக்க முன்வரவில்லை எனவே தான் படம் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிம்பு நடிக்கும் படம் கைவிடப்பட்டுள்ள இதே வேளையில் தனுஷ் நடிக்கும் புதிய படம் ஒன்றை செல்வராகவன் இயக்க இருப்பதாகவும் அந்தப் படத்தை தனுஷ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பல போராட்டங்களுக்குப் பிறகு வாலு வெளியானது. இது நம்ம ஆளு படம் எப்போது ரிலீஸ் என்றே தெரியாமல் இருக்கிறது. இப்போது கான் படம் கைவிடப்பட்டதும் சேர்ந்துகொண்டுள்ளது. எனினும் கௌதம் மேனனின் படம் வெளியானால் மட்டுமே சிம்புவுக்கே சரியான நேரம் துவங்கும் என்றே தோன்றுகிறது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
[X] Close