Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அட்லி இயக்கும் விஜய் படத்தின் பெயர்?

 அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு விஜய்காந்த் நடிப்பில் வெளியான சத்ரியன் படத்தின் கதையை ஒத்து இந்தப்படத்தின் கதையும் இருப்பதாகப் பரவலாகப் பேச்சு இருக்கிறது.

அதற்கேற்றாற்போல் படத்தில் விஜய், காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்று செய்திகள் வருகின்றன. இந்தப்படத்துக்கு மூன்றுமுகம் என்று பெயர் வைக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. இப்போது அதிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். இப்போது படத்துக்கு காக்கி என்று பெயர் வைக்கலாம் என்று முடிவுசெய்திருக்கிறார்களாம்.

 

இந்தப்பெயரில் ஏற்கெனவே சரத்குமார் நடிப்பில் ஒருபடம் உருவானது. பாதிக்குமேல் வளர்ந்த நிலையில் அந்தப்படம் நின்றுபோனது. இதனால் இந்தப்பெயரை வைக்கலாமா? வேண்டாமா? என்கிற விவாதமும் நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.        

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்