Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இசைவிழாவில் கண்ணீர் விட்டார் காயத்ரி- காரணம் என்ன?

விஜய்சேதுபதி நடிப்பில் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகிவரும் படம் மெல்லிசை. இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குநர் ராம், கார்த்திக் சுப்புராஜ், மாகாபா ஆனந்த், இயக்குநர் தாமிரா, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் பட நாயகி காயத்ரி பேசும் போது, “ மெல்லிசை படம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும், அதிகமாக எதிர்பார்க்கும் படம் மெல்லிசை. இப்படம் நிச்சயம் எனக்குப் பெரிய பெயர் வாங்கித்தரும்” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே அழ ஆரம்பித்துவிட்டார்.

அதற்கு மேல் பேசாமல் அவருடைய இருக்கைக்கு சென்றுவிட்டார் காயத்ரி. பின்னர் விஜய்சேதுபதியும், இயக்குநர் ரஞ்சித்தும் பேசி சமாதானப்படுத்தினர். அவர் அழுததற்கு, என்ன காரணம்? இப்படத்திற்காக ஒவ்வொரு காட்சிக்கும் கஷ்டப்பட்டு கவனத்துடன் நடித்திருக்கிறாராம் காயத்ரி. இவரின் உழைப்பே கண்ணீருக்குக் காரணம் என்று அவரைத் தொடர்ந்து இயக்குநர் பேசும் போது தெரிந்தது.

காயத்ரி 18 வயசு படத்தின் மூலம் அறிமுகமாகி விஜய்சேதுபதியுடன் நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம் படத்தின் மூலம் பிரபலமானவர்.  தொடர்ந்து மத்தாப்பூ, ரம்மி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

2012 இல் நடிக்கவந்தும் இன்னும் முன்னிலைக்கு வராமல் இருக்கும் அவருக்கு, இந்தப்படம்தான் நல்வாழ்வு தருமென்று பெரிதும் நம்பிக்கொண்டிருந்தார், இந்தப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனதால் கடும்வருத்தத்தில் இருந்ததாலேயே மேடையில் அழுதுவிட்டார் என்று சொல்லப்படுகிறது.

மெல்லிசை இசை வெளியீட்டு விழா ஆல்பத்திற்கு: http://www.vikatan.com/cinema/album.php?&a_id=4845

எடிட்டர் சாய்ஸ்

[X] Close