Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிகர் சங்க நிலத்தை விற்கவில்லை: விஷால் அணியினருக்கு சரத்குமார் ஆதாரத்துடன் விளக்கம்!

நடிகர் சங்கத்தின் நிலத்தை விற்கவில்லை, நடிகர் சங்க நிலத்தின் பத்திரம் எங்களிடம் பத்திரமாக உள்ளது என்று விஷால் அணியினருக்கு நடிகர் சரத்குமார் ஆதாரத்துடன் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு சரத்குமார் அளித்த பேட்டியில், ''நடிகர் சங்கத்தின் நிலத்தை நாங்கள் விற்கவில்லை. நடிகர் சங்க நிலத்தின் பத்திரம் எங்களிடம் பத்திரமாக உள்ளது. சென்னை மாநகராட்சியின் அனுமதி பெற்றே நடிகர் சங்க கட்டடம் இடிக்கப்பட்டது. அங்கு கட்டடம் கட்ட,  எஸ்பிஐ சினிமாஸ் உடன் ஒப்பந்தம் செய்ததற்கு செயற்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டது.


2010 -ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி,  ஒப்பந்தம் குறித்து சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அப்போது, தலைவர், பொதுச்செயலாளருக்கு முழு அதிகாரம் அளிக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் பலன் தருமா என விவாதிக்கப்பட்டது.

கட்டடம் கட்டுவது பற்றி பொதுக்குழு, செயற்குழுவில் எதிரணி எதுவும் கூறவில்லை. சிறப்பு செயற்குழு கூட்டத்தில் ஒப்பந்தத்தை யாரும் எதிர்க்கவில்லை.

எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனத்திற்கான குத்தகைப் பணம் ஒரு கோடியே 48 லட்ச ரூபாய். ஒப்பந்தம் காலம் முடிந்ததும் ஒரு கோடியே 48 லட்ச ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும். கட்டடம் கட்ட அதிகபட்சம் 15 கோடி ரூபாய் செலவாகும் என்று அப்போது கூறப்பட்டது. 29 ஆண்டுகள் 11 மாதங்களுக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒப்பந்தம் குறித்து சங்கத்தை சேர்ந்த யாரும் ஆலோசனை தரவில்லை. ஆடிட்டர்களின் ஆலோசனை பெற்ற பிறகே கூடுதல் குத்தகை காலத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. வருமானத்தின் அடிப்படையில் தற்போதைய ஒப்பந்தம் மிகவும் சிறப்பானது. தவறு இருந்தால் அப்போதே சுட்டிக்காட்டி இருக்கலாமே. மனசாட்சிப்படி நான் எந்த தவறு எதுவும் செய்யவில்லை" என்று கூறினார்.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close