Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாகுபலி 2 படத்திற்கு ரெடியாகிவிடுவாரா அனுஷ்கா?

படத்துக்காக எடைக் குறைப்பு பின்னர் ஏற்றுவது என்பதெல்லாம் ஹீரோக்களின் வேலை. ஆனால் அதை தற்போது ஹிரோயின்களும் செய்யத் துவங்கிவிட்டனர். ஒல்லியாக வேண்டுமானால் ஆவார்கள் ஆனால் ஹீரோயின்கள் குண்டாவதெல்லாம் சாத்தியமல்ல என நினைத்துக் கொண்டிருந்த சினிமா துறையினர் மத்தியில் அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடையை ஏற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இந்நிலையில் பாகுபலி2 படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. இதற்கு மீண்டும் அனுஷ்கா எடையைக் குறைத்தாக வேண்டும். என்ற நிலையில் உள்ளார். இதற்காக எடையைக் குறைக்க அமெரிக்காவிற்கு சென்று எடைக் குறைப்பு சிகிச்சை எடுத்துக்கொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஏனெனில் பாகுபலி 2 படத்தில் அனுஷ்காவிற்கு முதல் பாதியை விட அதிகமான காட்சிகள், முக்கியமாக இளம் வயது இளவரசியாகவோ அல்லது அரசியாகவோ வரும் காட்சிகளும், காதல் காட்சிகளும் உள்ளன என்பதால் அனுஷ்கா உடல் எடையைக் குறைத்தே ஆக வேண்டும் . அப்போதுதான் கதைக்கும் காட்சிகளுக்கும் பொருத்தமாக இருப்பார் என்பதால், விரைவில் அமெரிக்க செல்லவிருக்கிறாராம் அனுஷ்கா. பாகுபலி2 படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் துவங்கவுள்ளது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close