Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அனிருத்துக்கு ஷங்கர் பாராட்டு, அதிலும் ஒரு சர்ச்சை

அனிருத்தின் பிறந்தநாளன்று திரைத்துறையைச் சேர்ந்த ஏராளமானோர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். அவர் பிறந்தநாளன்றே அஜித்தின் வேதாளம் படத்தின் பாடல்களும் வெளியாகின. அதனாலும் அனிருத்துக்கு நிறையப்பாராட்டுகள்.

அதேநேரம் இயக்குநர் ஷங்கரும் அவரைப் பாராட்டியிருந்தார். அவர் பாராட்டியது பிறந்தநாளுக்காகவோ, வேதாளம் படத்தின் பாடல்களுக்காகவோ இல்லை, சில தினங்களுக்கு முன்பு அனிருத் இசையில் வெளியான நானும்ரவுடிதான் பாடல்களைப் பாராட்டி தன்னுடைய டிவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

அவருடைய வேலைப்பளுவுக்கு நடுவில் இப்போதுதான் நானும்ரவுடிதான் பாடலை அவர் கேட்டிருக்கக்கூடும். கேட்டவுடன் பாராட்டியிருக்கலாம். ஆனால் அவர் பாராட்டியநேரத்தில் அனிருத்தின் இன்னொருபடம் அதுவும் அஜித்படத்தின் பாடல்கள் வெளிவந்த நேரம்.

அதைப்பற்றி எந்தக்கருத்தும் சொல்லாமல் நானும்ரவுடிதான் பாடல்களை மட்டும் பாராட்டியிருப்பது சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறதாம்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close