Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புரூஸ்லீயாக மாறவிருக்கும் ஜி.வி.பிரகாஷ்!

டார்லிங் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். அடுத்து த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட்டார்.

இவரின் அடுத்தப் படத்தின் பெயர் “புரூஸ் லீ”. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாகவும், கீர்த்தி கர்பந்தனா நயாகியாகவும் நடிக்கிறார்கள். அறிமுக இயக்குநர் பிரஷாந்த் பாண்டி ராஜ்  இப்படத்தை இயக்குகிறார். ஆக்ஷன் காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்தில் பால சரவணன் , முனிஸ் காந்த் [ராமதாஸ்] மற்றும் பலர் நடிக்கவுள்ளனர்.

இப்படத்திற்கான படபிடிப்பு வருகிற நவம்பர் மாதம் முதல் துவங்கவிருக்கிறது. ஹாரர், அடல்ட் என்று வெவ்வேறு வகையிலான களங்களில் நடித்துவந்த ஜி.வி.பிரகாஷின் இந்தப் படத்தின் மூலம் குழந்தைகளை கவரவிருக்கிறார்.

குழந்தைகளை மையமாக கொண்டு படங்களை இயக்கும் பாண்டிராஜிடம் உதவியாளராக இருந்த பிரஷாந்த் பாண்டிராஜ், இப்படத்தை இயக்குவதால் குழந்தைகளை கவரும் ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்கிறார்கள்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close