Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வேதாளம் பேய்ப் படமா? இணையத்தைக் கலக்கும் வேதாளம் கதை!

அஜித் நடிப்பில் வீரம் சிவா இயக்கி வரும் படம் வேதாளம் படத்திற்கு இசை அனிருத். ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி நடிக்கும் இப்படத்தின் பாடல்கள் நள்ளிரவு 12 மணிக்கும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் அனிருத் பிறந்தநாளில் வெளியானதால் ரசிகர்கள் ‪#‎VedalamAlbumWithAniBdayBash‬ என ட்ரெண்டை உருவாக்கிக் கொண்டாடினர்.

இந்நிலையில் படத்தின் கதைக் குறித்தப் புதுத் தகவல்கள் கசிந்து வருகின்றன. பாட்ஷா பாணியில் ஒரு தாதா ஃப்ளாஷ் பேக், பின்னர் எதுவும் வேண்டாம் என அவர் கல்கத்தாவில் தங்கையுடன் இருக்கிறார் இப்படி ஒரு கதை உலாவி வர இடையில் அஜித் பேயாக நடிக்கிறார் என இன்னொரு தகவல் கசிந்துள்ளன. எனினும் அது கமர்ஷியல் கதைதான் பேய்க் கதையில்லை என அடித்துச் சொல்கிறார்கள் படத்திற்கு நெருங்கிய வட்டாரங்கள்.

பேய் படமென சுற்றி வரும் கதை இதுதான்: கல்கத்தாவில் இருக்கும் அப்பாவி டாக்ஸி டிரைவர் அஜித்துக்கும் அவரது தங்கை லட்சுமி மேனனுக்கும் ரவுடிகளால் பிரச்னை வருகிறதாம். அதில் லட்சுமி மேனன் இறந்துவிடுகிறார். உயிருக்கு போராடும் நிலையில் இருக்கும் அப்பாவி அஜித்துக்கு இன்னொரு அஜித்தின் ஆவி நட்பாக பிறகென்ன நடந்தது என்பதே மீதிக் கதையாம். இப்படி ஒரு கதையும் தற்போது இணையங்களில் பரவி வருகின்றன. எது எப்படியோ படம் வெளியானால் அஜித்துக்கான மாஸ், சிவாவின் நக்கல் எனக் கதைக்களம் கண்டிப்பாக வேறு மாதிரி தான் இருக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close