Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமலாபாலின் ஆசையை நிறைவேற்றிய பாண்டிராஜ்

சூர்யா தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் பசங்க 2 படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா இன்று சென்னையில் சத்யம்திரையரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்தவர்களை வரவேற்று இயக்குநர் பாண்டிராஜ் பேசினார். 2010 ஆம் ஆண்டு இதேமேடையில் கலைஞர்அய்யா தலைமையில் அருள்நிதி நடித்த வம்சம் படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா நடந்தது. மிகப்பெரியஅளவில் அந்தவிழா நடந்தது.

அப்போதே, இதுமாதிரி இனிமேல் உங்களுக்கும் எனக்கும் ஒரு மேடை அமையாது என்று அருள்நிதி சொன்னார். அவர் சொன்னமாதிரியே ஆகிவிட்டது. அதன்பின்னர் இந்த மேடையேற ஐந்தாண்டுகளாகிவிட்டன. மெரினா படத்தின் பாடல்களை மெரினாகடற்கரையிலேயே வெளியிட்டோம். கேடிபில்லாகில்லாடிரங்கா படத்தின் பாடல்களை இங்குவெளியிடமுடியாத சூழல் ஏற்பட்டது.

இப்போது சூர்யாசார் மூலம் மீண்டும் இந்த மேடையேறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. இந்தப்படத்தில் ஒரு சிறுவனும் சிறுமியும்தான் கதாநாயகன், கதாநாயகி. அவர்களுக்குப் பின்னால் நின்று குணச்சித்திர வேடத்தில் சூர்யாசார் நடித்திருக்கிறார். நூறுகோடி வியாபாரமதிப்புள்ள எந்த ஹீரோவும் இப்படி நடிக்க ஒப்புக்கொள்ளமாட்டார். இந்தப்படத்தின் கதையைக் கேட்டதும் நானே தயாரிக்கிறேன் என்று முன்வந்ததோடு ஒரு குணச்சித்திரவேடத்தில் நடிக்கவும் முன்வந்தார்.

அதேபோல அமலாபால். சூர்யாவோடு நடிக்கும் ஆசை நிறைவேறாமல் போய்விட்டது என்று அவர் பேட்டி கொடுத்திருந்தார். அவருடைய ஆசையை நிறைவேற்றி வைக்கலாம் என்று இந்தப்படத்தில் அவரை நடிக்கவைத்தோம். பிந்துமாதவி, கார்த்திக், முனிஸ்காந்த் ஆகியோர் மட்டுமின்றி நான் கேட்டதற்காக சின்னச்சின்னக் காட்சிகளில் நடித்த சமுத்திரக்கனி, ஜெயப்பிராகஷ், இசையமைப்பாளர் சிற்பி உட்பட படத்தில் பணியாற்றிய எல்லோருக்கும் நன்றி. நல்லவிசயங்களை நாமே சொல்வதைக் காட்டிலும் சூர்யாசார் மாதிரி ஒரு மாஸ்ஹீரோவை வைத்துச் சொன்னால் எல்லோருக்கும் போய்ச்சேரும். அது இந்தப்படத்தில் நடக்கும் என்று பேசினார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்