Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிகர்சங்கத்தேர்தல் பற்றிப் பேசக்கூடாது- பசங்க2 விழாவில் வேண்டுகோள்

  நடிகர்சங்கத்தேர்தல் நாளை நடைபெற உள்ளநிலையில் இன்று பசங்க 2 படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சத்யம்திரையரங்கில் நடந்தது. அந்தப்படத்தைத் தயாரித்திருப்பவர் சூர்யா. அவருடைய தம்பி கார்த்தி, நடிகர்சங்கத்தேர்தலில் நாசர்அணி சார்பில் பொருளாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.

இதனால் சூர்யாவுடைய ஆதரவும் அவர்களுக்குத்தான். அப்படியிருந்தும், விழாவில், நடிகர்சங்கத்தேர்தல் பற்றி யாரும் பேசவேண்டாம் என்று சொல்லிவிட்டனர். படத்தின் முன்னோட்டத்தையும் இரண்டுபாடல்களையும் திரையிட்டனர்.

அது முடிந்தபின்பு திரையிலேயே, ரொம்ப ரொம்ப முக்கியம் அங்கிள், விழாவில் நடிகர்சங்கத்தேர்தல்பற்றி யாரும் பேசவேண்டாம் என்று குழந்தைகள் சொல்வது போலவே எழுதிவைத்துவிட்டார்கள். திரையில் அந்த எழுத்துகள் வந்ததும் அரங்கு முழுவதும் சிரிப்பலைகள்.     

 
 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close