Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேர்தலை நிறுத்த சரத் அணி சதி - வடிவேலு பேட்டி!

நடிகர் சங்கத் தேர்தலில் அடிதடி, கலவரமான நிலை நிலவுகிறது. விஷால் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.திடீரென நடந்த சலசலப்புக் காரணமாக பிரச்னை ஏற்பட இரு குழுவுக்கும் இடையில் பரபரப்பு நிலவுகிறது.

பிரச்னை நடந்த வேளையில் விஷால் தரப்புக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்கவில்லை எனக் கூறப்பட்டது. என்றாலும் இரு பக்கமும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வடிவேலு  அதற்கு பதில் அளித்துள்ளார்.

வடிவேலு பேசும்போது, “ நடிகைகள் மீது தாக்குகிறார்கள். சரத் அணிக்கு தேர்தல் பீதி வந்துவிட்டது. தேர்தல் பயத்தினாலே தான் இவ்வாறு செய்கிறார்கள். என்ன பண்ணாலும் அவங்க பருப்பு இங்க வேகாது.

அந்த நேரத்தில் கேரவனிலிருந்து வெளியே வந்த விஷால் ” தயவு செய்து தேர்தலை நடத்த விடுங்கள்.என்ன திட்டமிட்டாலும் ஐந்து மணி வரை கண்டிப்பாக தேர்தல் நடக்கும். நடந்தேத் தீரும். என்னை அடித்தால் கூடப் பரவாயில்லை. நடிகைகளை அடிக்கிறார்கள், அவர்களுக்குப் பாதுக்காப்பு வேண்டும்.

என்னை அடிக்க கை ஓங்கினார். நான் தடுத்தேன். அவரை நான் எந்தப் படத்திலும் பார்த்ததே இல்லை.அவர் நடிகரே இல்லை. யாரென்றே தெரியவில்லை.

நான் ஓட்டுச்சாவடிக்கும் செல்ல வேண்டும் தயவு செய்து தேர்தல் ஐந்து மணிவரை நல்ல முறையில் சென்றாக வேண்டும். உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன் என விஷால் சற்று மயக்கமான நிலையிலும் படபடப்பான நிலையிலும் பேசியுள்ளார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close