Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வடிவேலுவை அடிக்கப் பாய்ந்த சுயேட்சை வேட்பாளர் !

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுபவர் மோகன் குமார். இவர் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.

தற்பொழுது தேர்தல் பகுதிக்கு வந்த வடிவேலுவைப் பார்த்து, “ நான்கு, ஐந்து வருடமா உங்களைக் காணும்னு சொல்லுறாங்க. நீங்க இங்கே இருக்கீங்க, எனக்கு ஓட்டுப் போடுங்க” என்று மோகன்குமார் கேட்டதற்கு “ நீ எப்படி அப்டி கேட்கலாம் என்று வடிவேலு உடன் வந்தவர்கள் கேட்டிருக்கிறார்கள். அதனால் இரு கூட்டத்திற்கும் இடையே சலசப்புடன் சண்டையும் மூண்டிருக்கிறது.

மோகன் குமார் கூறும் போது, வடிவேலு உடன் வந்தவர்கள் தான் அடிக்க பாய்ந்தார்கள் என்று கூறுகிறார். இதுவே வடிவேலு உடன் இருந்தவர்கள், மோகன்குமாருடன் இருந்தவர்கள் குடிபோதையில் அடிக்கவந்தார்கள் என்று கூறுகிறார்கள். இந்த நிகழ்வு நடந்துகொண்டிருக்கும் போதே அங்கிருந்து வேகமாக கிளம்பினார் வடிவேலு.  

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close