Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கவுண்டர் ராக்ஸ்....மீடியாக்களை திக்குமுக்காட வைத்த காமெடி கிங்!

நடிகர் சங்க தேர்தலில் வாக்களிப்பதற்காக 'காமெடி கிங்' கவுண்டமணி நேற்று வந்திருந்தார். கவுண்டமணி வந்தால் மீடியாக்கள் விடுமா?

மீடியாக்களுடன் கவுண்டமணி படு கிண்டலாக, ஜாலியாக பேசிய உரையாடல் பின்வருமாறு!

மீடியாக்கள்: 'சார் நீங்க ஏதாவது கண்டிப்பா பேசணும்'

கவுண்டர்: 'என்னப்பா ஏதாவது பேசணும்னு சொன்னா எப்படி? என்ன பேசணும்னு கேள்வி கேளுங்க.

மீடியாக்கள்: எதாவாது பேசுங்க?

கவுண்டமணி: என்ன பேசுறதுன்னே தெரியாம எப்படிப்பா பேசுறது

மீடியாக்கள்: அட பொதுவா பேசுங்களேன்.

கவுண்டமணி: பொதுவா என்ன பொதுவா , சரி பொதுவா... பொதுவா... பொதுவா..  

மீடியாக்கள்: சரி விடுங்க அண்ணன, ரெண்டு வார்த்தை பேசச் சொல்லுங்க, உள்ள என்ன நடக்குது 

கவுண்டர்: அட என்ன பேசச்சொல்றீங்க . உள்ள எலெக்சன் நடக்குது

மீடியாக்கள்: நீங்க கருத்து சொல்லுங்க

கவுண்டர்: என்னக் கருத்து சொல்ல

மீடியாக்கள்: தமிழ் நடிகர்சங்கம்னு ரஜினிகாந்த் மாத்த சொல்லியிருக்காரு, இந்திய நடிகர் சங்கம்னு கமல் மாத்தச் சொல்லியிருக்காரு இதுக்கு உங்கக் கருத்து சொல்லுங்க?

கவுண்டமணி: நடிகர் சங்கம்னு இருந்தா போதும்...

இப்படி அவர் பேசி முடிக்க அங்கே சிரிப்பு வெடிகள் வெடித்தன. 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close