Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடிகர்சங்கத் தேர்தலில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள்

காலையிலேயே, விரைவில் திருமணமாகவிருக்கும் தன் மகள் ரேயானுடன் வாக்களிக்கவந்தார் ராதிகா. வந்தவுடனேயே பலரும் தனித்தனியாகப் பேட்டி கேட்க, நான் ஓட்டுப்போட்டு உடனே வெளியூர் போகவேண்டியிருக்கிறது என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுச்சென்றார் ராதிகா.
 
ஒரேகாரில், சுகாசினி, ரேவதி, அர்ச்சனா, ஈஸ்வரிராவ் ஆகியோர் வந்து ஓட்டுப்போட்டுவிட்டு ஒரேகாரில் புறப்பட்டுச் சென்றனர்.
 
சத்யராஜ் தன் மகன் சிபிராஜோடும், லட்சுமி தன் மகள் ஐஸ்வர்யாவோடும், தியாகராஜன் தன்மகன் பிரசாந்தோடும் வைஜெயந்திமாலா தன் மகன் சுசித்ராபாலியோடும் வாக்களிக்கவந்தனர். கார்த்திக் வந்தபோது அவருடைய மகன் கௌதம்கார்த்திக் வரவில்லை. அவர் அமெரிக்காவில் இருப்பதாகவும் அதோடு அவர் இன்னும் சங்கத்தில் உறுப்பினராகவில்லை என்றும் கார்த்திக் சொன்னார்.
 
காலையிலேயே ஓட்டுப்போட வந்தார் நடிகர்நகுல். அவருடைய சங்கஅடையாளஅட்டையை எடுத்து வராததால் உள்ளே அனுமதிக்கவில்லை. எனவே திரும்ப வீட்டுக்குப்போய் அடையாளஅட்டையை எடுத்துவந்து ஓட்டுப்போட்டார்.

காலை ஏழரைமணியளவில் கறுப்புநிற ஸ்விப்ட்காரில் விஜய் வந்தார். அந்தக்காரைப் பார்த்தவுடன் அஜித் வருவதாக நினைத்துக்கொண்ட பத்திரிகையாளர்கள் அஜித், அஜித் என்று சத்தமிட்டபடி காரைச் சூழ, அதிலிருந்து விஜய் இறங்கினார். யாருக்கும் பேட்டி கொடுக்காமல் ஓட்டுப்போடச் சென்றுவிட்டார்.
 
ஓட்டு இல்லை என்கிற வெறுப்போடு வெளியே வந்து நின்றுகொண்டிருந்த மன்சூரலிகானை நட்போடு பார்த்தார் ராதாரவி, மிக அருகிலேயே இருந்தும் அவர் பக்கம் திரும்பாமல் நின்றுகொண்டிருந்தார் மன்சூரலிகான்.
 
சித்தார்த், அருள்நிதி, ஸ்ரீகாந்த் போன்றோர் ஓட்டுப்போட்டுவிட்டு வந்து சத்தமில்லாமல் வெளியேறிவிட்டனர்.
 
நாசர்அணியில் துணைத்தலைவராகியிருக்கும் பொன்வண்ணனின் மனைவி, சரண்யாவும் ஒட்டுப்போட்டு பத்திரிகையாளர்கள் யாரிடமும் எதுவும் பேசாமல் சென்றுவிட்டார்.
 
ஐந்தாண்டுகளுக்கு முன் திருமணமாகி ஐதராபாதில் செட்டிலாகிவிட்ட சுவாதி ஓட்டுப்போடுவதற்காகவே வந்திருந்தார்.
 
நடிகைசாயாசிங், ஓட்டுப்போடப்போகுமுன்பு எப்படி ஓட்டுப்போடவேண்டும் என்று அவருக்கு முழுயைமாக விளக்கி அனுப்பினார் நடிகர்நந்தா.
 
ஓட்டுப்போடப் போகும்பாதையில் நின்றுகொண்டு இரண்டுதரப்பினரும் வாக்குச் சேகரித்தனர். ஒரு துணைநடிகை வந்தபோது, நாசர்அணிசார்பில் நடிகர்விக்னேஷ் அவரிடம் எங்களுக்கு ஓட்டுப்போடுங்கள் என்று கேட்க எத்தனிக்கையில், சரத் அணிசார்பான ஜாக்குவார்தங்கமும் ஓட்டுக்கேட்க முன்வந்தார். நீங்கள் பேசுங்கள் என்று விக்னேஷ் விலக, இல்லையில்லை நீங்களே பேசுங்கள் என்று ஜாக்குவார் ஒதுங்கினார். அதன்பின் விக்னேஷ், பல ஆண்டுகளாக அவர்களே இருந்துவிட்டனர் எங்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள் என்று கேட்டார். அதற்கடுத்து எவ்வளவு ஆண்டுகள் இருந்தாலும் அம்மா அப்பா, அம்மா அப்பாதான் எங்கள் அணிக்கு ஓட்டுப்போடுங்கள் என்று கேட்டார்.
 
ரஜினிகாந்த் முதல் துணைநடிகர்கள் வரை எல்லோருக்குமே போவற்கு ஒரு பாதை ஓட்டுப்போட்டுவிட்டு வெளியேற இன்னொருபாதை. எல்லோரும் வெளியேறும் இடத்தில் எல்லாத் தொலைக்காட்சிகளும் புகைப்படக்காரர்களும் காத்துக்கொண்டிருந்தார்கள். சிம்பு வேட்பாளரும் என்பதால் போன பாதையிலேயே வெளியேறிவிட்டார். அதனால் அந்தப்பக்கம் இருந்தவர்களுக்கு மட்டும் பேட்டி கிடைத்தது. இந்தப்பக்கம் காத்திருந்தவர்கள் ஏமாந்துபோனார்கள்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close