Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கமலுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

நடிகர்சங்கத்தேர்தலில் வாக்களிக்க வந்த ரஜினிகாந்த், தேர்தலில் வெற்றிபெறுகிறவர்கள் உடனே தென்னிந்தியறடிகர்சங்கம் என்கிற பெயரை மாற்றி தமிழநாடுநடிகர்கள்சங்கம் என்று பெயர் வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அதன்பின்னர் சில மணிநேரங்கள் கழித்து வந்த கமல், இது எதிர்காலத்தில் இந்தியநடிகர்சங்கமாக மாறவேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்றார். இதை அந்த வளாகத்திலேயே கடுமையாக எதிர்த்துப்பேசினார் டி.ராஜேந்தர்.இது தொடர்பாக அரசியல்கட்சிகளும் கருத்துத் தெரிவித்துள்ளன.

நாம்தமிழர்கட்சித்தலைவர் சீமான் மற்றும் விடுதலைச்சிறுத்தைகள்கட்சி செய்தித்தொடர்பாளர் வன்னியரசு ஆகியோர் வெளிப்படையாக, ரஜினிக்கு நன்றியும் கமலுக்கு எதிர்ப்பும் தெரிவித்திருக்கின்றனர். கமல் இப்படிச் சொன்னதையொட்டி, சமுகவைலைதளங்களில் அவருக்கு எதிராகப் பல கருத்துகள் எழுதப்பட்டுவருகின்றன.  

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close