Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏழாம்அறிவுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஸ்ருதி

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவை அடுத்து இயக்கவிருக்கிறார்  ஏ.ஆர்.முருகதாஸ். இவர் தற்பொழுது ஹிந்தியில் சோனாக்‌ஷி சின்ஹாவை வைத்து அகிரா படத்தை இயக்கிவருகிறார்.

அகிரா படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்ததாக மகேஷ்பாபுவை வைத்து இயக்கவிருக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ஸ்ரீமந்துடு படத்திலும் ஸ்ருதியே நாயகியாக நடித்தார், மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏழாம் அறிவு படத்திலும் ஸ்ருதியே நாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் புலி படத்தைத் தொடர்ந்து அஜித்துடன் வேதாளம் படத்தில் ஸ்ருதி நடித்துவருகிறார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகவிருக்கிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close