Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செய்தியாளர் சந்திப்பில் கண்ணீர் விட்ட சரத்குமார்!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நேற்று நடந்துமுடிந்தது. இத்தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர்கள் அணி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்து சரத்குமார் பேசினார்.

நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவதில் ஊழல் ஏற்பட்டதாகவும், இதுவரை நடிகர் சங்கத்தை கட்டாமல் விட்டுவிட்டதாகவும் சரத் மீது பல அவதூறுகளை விஷால் அணி தெரிவித்திருந்தது. மேலும் எஸ்பிஐ சினிமாஸுடன் போடப்பட்ட ஒப்பந்தமும் விமர்சிக்கப்பட்டது.

இன்று பேசிய சரத், “ நடிகர் சங்கக் கட்டிடம் சம்பந்தமாக, எஸ்பிஐ சினிமாஸ் உடனான ஒப்பந்தத்தை செப்டம்பர் 29ம் தேதியே ரத்து செய்துவிட்டேன். ஏன் இவ்வளவு நாள் சொல்லாமல் இருந்தீர்கள் என்று கேட்டதற்கு சொல்லியிருந்தால் தேர்தலில் எனக்கு பலவீனம் ஆகிவிடும் என்பதற்காகத் தான் சொல்லவில்லை. இனி பதவி ஏற்கும் புது அணி நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவதற்கு என்ன செய்யவேண்டுமோ அதை முடிவெடுத்துக் கொள்ளட்டும் என்றார்.

ஏன் ஒப்பந்தத்தை ரத்துசெய்தீர்கள்?

இந்த 33 வருட அரசியல், சினிமா வாழ்க்கையில் இந்த சங்கக் கட்டிடம் என்னை ரொம்பவே வருந்த வைத்துவிட்டது. என்னை அதிகமாக பாதித்துவிட்டது. என்னைக் குற்றவாளியாக நினைக்க வைத்துவிட்டது என்று கூறிக்கொண்டிருக்கும் போதே கண்ணீரை விட்டார் சரத்குமார்.

எஸ்பிஐ சினிமாஸ் ஏன் ரத்து செய்ய ஒப்புக்கொண்டார்கள் என்றால், “ நடக்கும் அனைத்து பிரச்னைகளையும் அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என் மேல் பரிதாபப்பட்டு ரத்து செய்ய ஒப்புக்கொண்டார்கள்.

ஒப்பந்தத்திற்காக அவர்கள் அதிக செலவு செய்திருக்கிறார்களே அதை திரும்பக் கட்டமாட்டார்களா?

அவர்கள் செய்த செலவுகளை திரும்பக் கேட்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். இது சம்பந்தமாகவும் அவர்களிடம் பேசி செலவிற்கான பணமும் கேட்கவிடாமல் செய்துவிடுவேன்.

பதவியேற்கவிருக்கும் புதிய அணிக்குத் தேவையான ஆலோசனைகளையும் நான் வழங்குவேன். வேறு ஏதும் கெளரவப்பதவி  ஏற்கச் சொன்னால், அதற்கெல்லாம் போகமாட்டேன் என்பதும் உறுதி. இனிமேல் நடிகர் சங்கப் பொறுப்பு எதையும் ஏற்கும் வாய்ப்பில்லை.

ஓப்பந்தத்தை ரத்து செய்ததை தேர்தலுக்கு முன்னரே அறிவித்திருந்தால் வெற்றி பெறும் வாய்ப்பு கிடைத்திருக்குமே?

அப்படியெல்லாம் யோசிக்கவில்லை. இந்த விஷயத்தைச் சொன்னால் அவர்களுக்குப் பலமாகவும், உங்களுக்கு பலவீனமாக இருக்கும் என்று சொன்னதால் சொல்லாமல் தவிர்த்தேன். வெற்றி பெற்ற பிறகு சொல்லலாம் என்றிருந்தேன்.

இவ்வாறு சரத்குமார் கூறினார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close