Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

துப்பாக்கி, கஜினி, லிஸ்டில் அடுத்த படமா?

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு , ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளிவந்த ‘செல்வந்தன்’ படம் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து மகேஷ்பாபு நேரடித் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.அதன்படி, தற்போது ‘பிரம்மோத்சவம்’ என்ற படம் தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகிவருகிறது.

இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் புதிய படத்தில் மகேஷ் பாபு நடிக்கவிருப்பதாக தற்போது உறுதியாகியுள்ளது. இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. முருகதாஸ் தற்போது இந்தியில் சோனாக்ஷி சின்ஹாவை வைத்து ‘அகிரா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடியும் தருவாயை எட்டியுள்ளது.

இப்படம் முடிந்த கையோடு, மகேஷ்பாபு , ஸ்ருதி இணையும் புதிய படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடுவார்கள் எனத் தெரிகிறது. இப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகவிருக்கிறதாம். இப்போது மேலும் ஒரு புதிய செய்தியாக படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ் என  உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் ஏற்கனவே கஜினி, துப்பாக்கி, ஏழாம் அறிவு என பாடல்கள் மிகப்பெரும் ஹிட்டானது நாமறிந்ததே. இந்நிலையில் தற்போது மீண்டும் இந்தக் கூட்டணி ஒன்று கூடியுள்ளது. மகேஷ் பாபு, ஏ.ஆர்.முருகதாஸ், ஹாரிஸ், ஜெயராஜ், ஸ்ருதி ஹாசன் புதிய ஸ்டைல் கூட்டணி என்றும் கூறலாம். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close