Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காக்காமுட்டை போல் அடுத்தபடத்துக்கும் வரவேற்பு, மகிழ்ச்சியில் மணிகண்டன்

காக்காமுட்டை பட இயக்குநர் மணிகண்டன் இயக்கியிருக்கும் அடுத்தபடம் “குற்றமே தண்டனை”. இப்படத்தில் விதார்த் நடித்தது மட்டுமின்றி முதன்முறையாக தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

இப்படம் இரண்டு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடத் தேர்வாகியுள்ளது. இதனால் தான் தயாரித்த முதல் படமே தேர்வாகியுள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

இப்படத்தில் பாடல்கள் கிடையாது. பின்னணி இசையை இளையராஜா கோர்த்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ளார்.

வரவிருக்கும் மும்பை மற்றும் கேரளா சர்வதேசத் திரைப்பட விழாக்களில்  “குற்றமே தண்டனை” திரையிடவிருக்கிறது. இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து இப்படத்திற்கான முதல் பிரதி தயாராகிவருகிறதாம்.

“ இப்படக் கதையை கேட்டபோது, வேறு களத்தில் வித்தியாசமான இருந்ததால் தயாரித்தேன். படம் முடிந்தபிறகு பார்க்கும் போது, கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியிருந்தார் இயக்குநர். அப்போதே நம்பிக்கை பிறந்துவிட்டது. சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிட முக்கிய காரணம் பட இயக்குநர் மணிகண்டன் தான். முதல் தயாரிப்பே இவ்வாறு தேர்வானது மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் தருகிறது” என்று சொல்லியிருக்கிறார் இப்பட நடிகரும் தயாரிப்பாளருமான விதார்த்.

இதேபோல் இரண்டாவது படத்துக்கும் சர்வதேச திரைப்படவிழாக்களில் அங்கீகாரம் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறாராம் இயக்குநர் மணிகண்டன்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்