Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாசர், விஷால், கார்த்தியிடம் சூர்யா திடீர் வேண்டுகோள்

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் சூர்யா. அக்கடிதத்தில் சரத்குமார் அணியை விமர்சனம் செய்தும், இப்போது இருப்பவர்களுக்குப் பல வேண்டுகோள்களும் வைத்திருக்கிறார். அக்கடித விவரம்...

இந்தத் தேர்தல் நமக்குப் பல பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது. தேர்தலுக்காக நடந்த பிரச்சாரத்தில் வருந்தத்தக்கப்  பல விஷயங்கள் அரங்கேறின. விமர்சனங்கள் எனும் பெயரில் தனிமனிதத்  தாக்குதல்கள் நடந்தன. சமாதான முயற்சிகள் தோல்வியுற்றன. பொறுப்பில் இருக்கும்போது செய்த கடமைகள் உதவிகளாகச் சித்தரிக்கப்பட்டன.

நடிகர்கள் ஒரே குடும்பம் என்று சொல்லிக்கொண்டே ஜாதி, மொழி, இனத்தின் பெயரால் பிரிவினை பேசப்பட்டது. படத்தின் வெற்றி தோல்விகளை வைத்து கேலி செய்தனர். விருப்பப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்த காரணத்தால் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய மூத்த கலைஞர்கள் மீது பண்பு மறந்து வார்த்தை தடித்து அவதூறுகள் வீசப்பட்டன. இத்தகைய சூழ்நிலை இனி ஒரு போதும் வராமல் தடுப்பது நம் அனைவரின் பொறுப்பு.

வெற்றி பெற்ற புதிய பொறுப்பாளர்களுக்கு சக கலைஞனாக எனது வேண்டுகோள் இவை. கடமைகளை உதவிகளாக நினைத்துச் செய்யாதீர்கள். மூத்த கலைஞர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதில் முன்னுதாரணமாக இருங்கள்.

கொடுத்த வாக்குறுதிகளை இதயத்திலிருந்து நிறைவேற்றுங்கள், பகைமையை விரட்டி ஒற்றுமைக்கு வித்திடுங்கள், சக கலைஞர்கள்  உங்கள் மீது வைத்திருக்கும், நம்பிக்கையும் எதிர்பார்ப்புமே உங்களின் உண்மையான வெற்றி. நடிகர்கள் மற்றும் திரைத்துறையின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் நன்றி என்று சூர்யா எழுதியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close