Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எனக்கும் தனுஷுக்குமான பந்தம் திட்டமிட்டு பின்னப்பட்டதல்ல - வெற்றிமாறன்

விசாரணை படம் வெளியாவதற்கு முன்பே விருதுகளையும், பல இயக்குநர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இந்நிலையில் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன. இந்நிலையில் தனுஷுடனான நட்பு குறித்து வெற்றிமாறன் மனம் திறந்து பதிலளித்துள்ளார்.

திட்டமிட்டு ஒரு உறவை வளர்க்க முடியாது. முக்கியமாக எதிர்பார்ப்புகள் உறவுகளுக்குத் தேவையில்லை. இதை திட்டமிடவும் முடியாது. அதுவாக அமைய வேண்டும். எங்களுக்குள் அமைந்தது. எங்கள் இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் நல்ல நம்பிக்கையும் , மரியாதையும் உள்ளது. முக்கியமாக நாங்கள் இருக்கும் துறையிலும் சரி மனிதநேயத்திலும் சரி இருவரும் ஒரே மாதிரியான எண்ண அலைகளுடன் இருப்பதே இதற்கு முதல் காரணம்.


ஒரு படம் எங்களுக்குப் பிடித்தால் அது குறித்து அதிகம் பகிர்தல்,கலந்தாலோசித்தல், எதிர்மறையான விஷயங்களை ஆராய்தல் என எங்களை நாங்களே பல வருடங்களாக செதுக்கினோம் எனலாம். முக்கியமாக காக்காமுட்டை. மணிகண்டன் அறிமுக இயக்குநர் தான் எனினும் தனுஷ், இந்தக் கதை கமர்ஷியலாகவும், உலகத் தரத்திலும் நல்ல வரவேற்பு பெறும் என்றார். தனுஷ் ரொம்பவும் நம்பிக்கையாக இருந்தார் அந்தப் படத்தில். ஆனால் இந்த அளவிற்கு வரவேற்புகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

எனது அடுத்த படம் மீண்டும் தனுஷ் நடிப்பில் வட சென்னை பிப்ரவரி 2016ம் ஆண்டு துவங்க உள்ளது. எனினும் விசாரணை நவம்பரில் வெளியான பிறகுதான் எதுவும் உறுதியாகச் சொல்ல முடியும். இப்படித்தான் சூதாடி படத்தை துவங்கி ஐந்து நாட்கள் ஷூட்டிங் முடிந்த பிறகு விசாரணை படத்தை ஆரம்பித்துவிட்டேன்.ஏனெனில் நான் என்  உள்ளுணர்வின் படி படம் இயக்குபவன். எனவே தான் எதுவாயினும் விசாரணை படத்திற்குப் பிறகு தான் என தனது அடுத்தபடம் குறித்துக் கூறியுள்ளார் வெற்றிமாறன்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்