Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் படத்தின் பெயர் மாறியது எதனால்?

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படத்துக்குப் பெயர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. படத்தில் விஜய், காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இதனால் படத்துக்கு மூன்றுமுகம் என்று பெயர் வைக்க முடிவு செய்தார்களாம்.

ரஜினிபடத்தின் பெயர் என்பதால் அந்தப்படத்தைத் தயாரித்த நிறுவனத்திடம் அந்தப்பெயரை வாங்கப் பேச்சுவார்த்தைகள் நடந்ததாகச் சொல்லப்பட்டது. பெயரை வாங்கிவிட்டார்கள் என்றும் சொன்னார்கள். இப்போது திடீரென காக்கி என்றொரு பெயர் சொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறது.

ரஜினி படப்பெயர் என்னவாயிற்று? அந்தப்பெயர் படத்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்துத்தான் வாங்கினார்களாம். முன்னரே, பாபிசிம்ஹா நடிக்கவிருக்கும் படத்திற்கு  “வீரா” என்று பெயரும், தற்பொழுது  ஜீவா நடிக்கும் ஒரு படத்துக்கு  “போக்கிரிராஜா” என்றும் அண்மையில் தனுஷ் படத்துக்கு “தங்கமகன்” என்றும் ரஜினி படப்பெயர்களை வைத்துவிட்டார்கள்.

எனவே, விஜய் படத்துக்கும் ரஜினி படப்பெயரை அறிவித்தால் கேலிக்குள்ளாக நேரிடும் என்று நினைத்தே வேறு பெயருக்கு மாறிவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close