Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சந்தானம் படத்தில் நடிக்கிறார் கருணாஸ்?

இனிமேஇப்படித்தான் படத்தைத் தொடர்ந்து சந்தானம் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் படத்துக்கான வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றனவாம்.

அந்தப்படத்தை சந்தானத்தின் நண்பரான லொள்ளுசபா ராம்பாலா இயக்கவிருக்கிறார் என்றும் அந்தப்படத்தை தேனான்டாள்பிலிம்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் ஏற்கெனவே செய்திகள் வந்திருந்தன.

ஒரு கதாநாயகனுடன் படம் முழுவதும் நகைச்சுவைநடிகரொருவர் வருவது பெரும்பாலான தமிழ்த்திரைப்படங்களின் வழக்கம். நகைச்சுவைநடிகராக இருந்த சந்தானம் கதாநாயகனாகிவிட்டதால் அவருடன் நகைச்சுவைவேடத்தில் நடிக்க யாரும் முன்வரமாட்டார்கள். ஏனெனில் அவரே காமெடிசெய்துவிடுவார் என்றும் அவர் இருக்கும்போது நம்மை காமெடி செய்யவிடமாட்டார் என்றும் நடிகர்கள் நினைப்பதுதான் காரணம் என்பார்கள்.

இந்தப்படத்தில் அவருடன் நடிக்க ஒரு நகைச்சுவை நடிகரை பல நாட்களாகத் தேடிக்கொண்டிருந்தார்களாம். கடைசியில் தயக்கத்துடன் நடிகர் கருணாஸை அணுகியிருக்கிறார்கள். அவரும் இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

அவரே கதாநாயகனாக நடித்தவர் என்பதால் அவருடைய வேடமும் படத்தில் பெரிதாக இருக்கும் என்று சொல்கிறார்கள். எப்படியிருந்தாலும் சந்தானம் படத்தில் கருணாஸ் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பது, ஒரு நடிகன் ஈகோவை விட்டுவிட்டு வேடத்தை மட்டும் பார்ப்பது நல்லது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தால் நல்லதுதான் என்கிறார்கள்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close