Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சர்வதேசப் படவிழாவில் விருது பெற்ற தமிழ்ப்படம்

தமிழ்ப்படங்கள்  தற்பொழுது உலக அரங்குகளில் இடம்பிடிப்பது அதிகரித்துவருகிறது. காக்காமுட்டை, குற்றம்கடிதல், விசாரணை உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து இன்னொரு படமும் உலக சினிமா அரங்கில் பாராட்டையும் விருதையும் பெற்றிருக்கிறது.  

புதுமுக இயக்குநர் ஹரி விஸ்வநாதன் இயக்கத்தில் உருவான படம் தான் ரேடியோ பெட்டி. இப்படம் தென்கொரியாவில் நடைபெற்ற பூஸான் சர்வதேச படவிழாவில் திரையிடப்பட்டு விருதினையும் பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் 20 ஆயிரம் அமெரிக்க டாலரையும் பரிசாக வென்றிருக்கிறது. இந்திய மதிப்பில் 12 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்கொரிய நடக்கும் பூஸான் திரைப்பட விழாவில் முதன்முறையாகத்  திரையிடப்பட்டு விருதுபெற்ற தமிழ்ப் படம் “ரேடியோ பெட்டி” தான். இப்படத்தில்  75 வயதான நாடக நடிகர் லட்சுமணன் என்பவர், அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அவரும் ரேடியோ பெட்டியும் தான் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள். உடன் டி.வி.ராமானுஜம், ஷோபனா, நிவாஸ், ஆதித்தன், பேபி மாயா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு சரவணா நடராஜன் ஒளிப்பதிவு செய்ய, லண்டனைச் சேர்ந்த ரிச்சர்ட் போர்ட் என்பவர் இசையமைத்திருக்கிறார். விரைவில் இப்படம் வெளியாகவிருக்கிறது.

இப்படம் பற்றி இயக்குநர் ஹரி விஸ்வநாத் விகடனுக்கு தந்த பேட்டியில் பேசியபோது, “ பல பேருக்கு விருது பெற்ற படம்னாலே ‘ரொம்ப ஸ்லோவா ஓட்டுவாங்கப்பா’ங்கிற எண்ணம் இருக்கு. அது தப்பு. இந்த ‘ரேடியோ பெட்டி’யில பாட்டு கிடையாது. புகை, குடி காட்சிகள் கிடையாது. ஆனா, விறுவிறுப்பு இருக்கும். என்னோட ‘இடுக்கன்’ குறும்படத்துல நடிச்ச லட்சுமணன்ங்கிற பெரியவர்தான் இந்தப் படத்துல ஹீரோ.

24 மணிநேரமும் ரேடியோவுல பாட்டு கேட்டுக்கிட்டு கிடக்கச் சொன்னாலும் சரின்னு சொல்ற அலாதியான தாத்தா. இப்படி இருக்கிறதனால அவரோட குடும்பத்துல நடக்கிற பிரச்னைகள், அவருடைய நண்பர்கள், அலுவலகத்தில நடக்கிற பிரச்னைகள். இதுதான் படம். நானும், நண்பரும்தான் தயாரிச்சிருக்கோம். அதனால, வெறும் 15 நாள்ல மொத்தப் படத்தோட படப்பிடிப்பையும் முடிக்க வேண்டிய சூழல்.

ஏன்னா, பொதுவாகவே இந்த மாதிரிப் படங்களுக்கு விருதுகளும், திரைப்படவிழாக்களும்தான் பெரிய பப்ளிசிட்டி. அதனாலதான் நிறைய விருதுகளுக்கு அனுப்பி வெச்சிருக்கோம். தவிர, படத்தை புரமோஷன் பண்றதுக்கு காசு இல்லை பாஸ்!’’ என்று சிரித்தார் ஹரி.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close