Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிவகார்த்திகேயன் தான் ஃபர்ஸ்ட்!

சென்னை மெட்ரோ ரயில் துவங்கியதிலிருந்து இன்னும் ஒரு படத்தின் படப்பிடிப்பும் இங்கே நடக்க வில்லை. முதல் முறையாக சிவகார்த்திகேயன் படத்திற்கு இந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது. பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாக இருக்கும் பெயரிடப்படாத இப்படம் விரைவில் துவங்கப்பட இருக்கிறது. படத்திற்கு இசை அனிருத். 

பாக்கியராஜ் கண்ணன், சுந்தர் சி மற்றும் அட்லியிடம் உதவி இயக்குநராக பணி புரிந்தவர். நவம்பர் 2 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. தொடக்கத்தில் பாடல் காட்சியொன்றைப் படமாக்கவிருக்கிறார்களாம். சென்னை மெட்ரோ ரயிலில் இப்படத்தின் பாடல் காட்சி படமாக்கப்படவிருக்கிறதாம். பாடலுக்கு நடனம் அமைக்கிறார் ராஜு சுந்தரம். சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடனம் ஆடவிருக்கிறார் படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ். புலி, மற்றும் மாவீரன் போன்ற படங்களுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் அமைத்த கமலக்கண்ணன் இந்தப் படத்திற்கு கிராபிக்ஸ் வேலைகள் அமைக்க இருக்கிறார்.

இந்தப் படத்திற்காக புகைப்பட வேலைகளும் தற்சமயம் நடந்துள்ளன. பிசி.ஸ்ரீராம் உட்பட அனைவரும் இந்தப் படத்திற்காக முன் கூட்டியே எல்லாவற்றையும் ஆராய்ந்து வேலை செய்து வருகிறோம். முதற்கட்டமாக இந்தப் பாடலுக்கான படப்பிடிப்புகள் நடக்கும் முன்பே தற்போது புகைப்படக் காட்சிகள் நடந்துமுடிந்துள்ளன எனக் கூறியுள்ளார் புகைப்படக் கலைஞர் பாலு. இவர் மணிரத்னம் படங்களுக்கு பிரத்யேகப் புகைப்படங்கள் எடுப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close