Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மணிரத்னம் படம் தள்ளிப்போனது எதனால்?

துல்கர், நானி ஆகியோரை வைத்து மணிரத்னம் இயக்குவதாக இருந்த புதியபடம் தள்ளிப்போயிருக்கிறது. டிசம்பர் 14 ஆம் தேதி அந்தப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டு வேலை செய்துகொண்டிருந்தாராம் மணிரத்னம். ஆனால் அவருடைய திட்டத்திற்கேற்ப நடிகர்களின் தேதிகள் கிடைக்கவில்லையாம்.

வெளியில் இப்படிச் சொல்லப்பட்டாலும் இந்தப்படத்துக்கான திரைக்கதை திருப்தியாக நிறைவடையவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால் அந்தப்படத்தை அப்படியே நிறுத்திவிட்டு வேறொரு படத்தைத் தொடங்கத் திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் வந்தன.

இது தொடர்பாக மணிரத்னம் அலுவலகத்தில் கேட்டால், டிசம்பரில் படத்தைத் தொடங்கும் எண்ணம் இருந்தது, ஆனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பைத் தொடங்கமுடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. படம் தாமதாகிறது.

ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பு இருக்கிறது. சார் இப்போது வெளியூரில் இருக்கிறார், அவர் சென்னை வந்தவுடன் எல்லாவற்றையும் முடிவுசெய்வோம் என்று சொல்கிறார்கள்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close