Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2016 பொங்கலுக்கு ரெண்டு படங்கள்!

'பரதேசி' படத்திற்குப் பிறகு, கரகாட்டக்கலையை மையமாக வைத்து பாலா இயக்கிவரும் படம் தாரை தப்பட்டை. சசிகுமார், வரலட்சுமி முக்கிய வேடங்களில் நடித்துவரும் இப்படம் இறுதிக்கட்ட வேலையை நெருங்கிவிட்டது.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படம் இளையராஜாவின் 1000வது படமாகும். சசிகுமார் தயாரித்துவரும் இப்படத்தின் உரிமையை ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

விரைவில் இசைவெளியிடப்படும் என்று சொல்லப்படுகிறது. இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டுவருகிறார்கள்.

அதேபோல ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சூர்யா, சமந்தா, நித்யாமேனன் நடிக்கும் 24 படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று  முன்னரே அறிவித்திருந்தனர். இப்படமும் உறுதியானால் தாரை தப்பட்டை படமும், சூர்யா படமும் பொங்கலுக்கு வெளியாகும்.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close