Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிம்புவை மாட்டிவிட்ட பாண்டிராஜ்

பாண்டிராஜ் எழுதி இயக்கியிருக்கும் பசங்க2 படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டுவிட்டது. அதைத் தொடர்ந்து படத்தை வெளியிடும் வேலைகளிலும் தீவிரமாக இருக்கிறார்கள்.

 

அநேகமாக தீபாவளிக்குப் பிறகு நவம்பர் கடைசிவாரத்தில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் பசங்க2 படம் பற்றிய செய்திகளை டிவிட்டரில் அவ்வப்போது பகிர்ந்துகொண்டிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

அவரிடம் சிம்பு ரசிகர்கள், இதுநம்மஆளு படம் எப்போது வரும்? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு பாண்டிராஜ் பதிலேதும் சொல்லாமல் இருந்திருக்கிறார். அதனால், நாங்க இதுநம்மஆளு பத்தி இவ்வளவு கேக்கிறோம், ஒரு பதில் கூட இல்லை, டிவிட்ஸ பாத்துட்டு பாக்காத மாதிரி இருக்காதீங்க என்று டிவிட் செய்திருந்தனர்.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக, இதுநம்மஆளு படத்தைத் பொறுத்தவரை என்னுடைய வேலைகள் முடிந்துவிட்டன, படத்தொகுப்பு முடிந்துவிட்டது, முன்னோட்டம் கூட தயார். நானும் உங்களைப் போலவே தயாரிப்பாளரின் முடிவுக்காகக் காத்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். படத்தைத் தயாரிப்பதும் சிம்பு குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close